Acharya Hridayam - தனியன்கள் (Thaniyan 2)
தனியன்கள்
ஆசார்யஹ்ருதயத் தனியன்கள்
பணவாள் அரவணைப்பள்ளி பயில்பவர்க் கெவ்வுயிரும் குணபோகம் என்று குருகைக்கதிபன் உரைத்த துய்ய உணர்பாவி நுட்பொருள் ஒன்று மறியா வுலகறிய மணவாளன் மாறன் மனமுரைத்தான் வண்முடும்பை வந்தே
படங்களுடன் கூடியுள்ள ஆதிசேஷன் மீது சயனித்துள்ள ஸ்ரீரங்கநாதனுக்கு அனைத்து உயிர்களும் அடிமை என்று நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழியின் ஆழ்பொருளாகிய நம்மாழ்வாருடைய திருவுள்ளத்தை (ஆசார்ய ஹ்ருதயம்), ஏதும் அறியாமல் உள்ள இந்த உலகத்திற்காக முடும்பை என்ற குலத்தில் அவதரித்த அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் அருளிச்செய்தார்.