Acharya Hridayam - தனியன்கள் (Thaniyan 1)
தனியன்கள்
ஆசார்யஹ்ருதயத் தனியன்கள்
ஆசார்ய ஸ்வாந்த வக்தாரம் அபிராமவராபிதம் ஸ்ரீக்ருஷ்ண தநயம் வந்தே ஜகத்குருவராநுஜம் த்ராவிடாநாம்நாய ஹ்ருதரம் குருபர்வ க்ரமாகதம் ரம்ய ஜாமாத்ரு தேவேந தர்சிதம் க்ருஷ்ணஸூநுநா
ஆசார்ய ஹ்ருதயம் என்னும் க்ரந்தத்தை அருளிச்செய்தவரும், ஸ்வாமி வடக்குத்திருவீதிப்பிள்ளையின் திருக்குமாரரும், ஸ்வாமி பிள்ளை லோகாசார்யரின் திருத்தம்பியாரும் ஆகிய ஸ்வாமி அழகிய மணவாளப்பெருமாள் நாயனாரை நான் வணங்குகிறேன். ஆசார்ய பரம்பரையில் தொடர்ந்து வந்த தமிழ்வேதமாகிய திருவாய்மொழியின் கருத்தானது, ஸ்வாமி வடக்குத்திருவீதிப்பிள்ளையின் திருக்குமாரராகிய அழகிய மணவாளப்பெருமாள் நாயனாரால் வெளிப்பட்டது.