Acharya Hridayam - தனியன்கள் (Thaniyan 4)
தனியன்கள்
பொதுத் தனியன்கள்
மாதா பிதா யுவதய: தநயா விபூதி: ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் ஆத்யஸ்ய ந: குலபதே: வகுளாபிராமம் ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா
(ஸ்வாமி ஆளவந்தார் அருளிச்செய்தது) தாய், தந்தை, இளவயதுப் பெண்கள், புத்திரர்கள், செல்வம் ஆகிய இவை அனைத்தும், முறையாக எந்தத் திருவடிகளாகவே உள்ளனவோ - எங்களது குலத்தின் தலைவராக உள்ளவரும், முதன்மையானவரும், வகுள மலர்களால் அலங்கரிக்கப்பட்டவரும், பக்தி என்ற செல்வம் நிறைந்தவரும் ஆகிய நம்மாழ்வாரின் அந்தத் திருவடிகளை எனது தலையால் நான் வணங்குகிறேன்.