Acharya Hridayam - தனியன்கள் (Thaniyan 3)

தனியன்கள்

பொதுத் தனியன்கள்

யோ நித்யம் அச்யுத பதாம்புஜயுக்ம ருக்ம வ்யாமோஹத: தத் இதராணி த்ருணாய மேநே அஸ்மத் குரோ: பகவத: தயைக சிந்தோ: ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே

(ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளிச்செய்தது) எந்த எம்பெருமானார், எப்போதும் அழிவற்றவனாகிய எம்பெருமானின் இரண்டு திருவடித் தாமரைகள் என்னும் செல்வத்தின் மீது கொண்ட ஆசை காரணமாக, அவன் அல்லாத மற்ற விஷயங்கள் அனைத்தையும் புல் போன்று எண்ணினாரோ, அப்படிப்பட்ட எனது ஆசார்யரும், பல உயர்ந்த குணங்கள் உள்ளவரும், கருணைக் கடலாக உள்ளவரும் ஆகிய அந்த உடையவரின் திருவடிகளை நான் உய்யும் உபாயமாகப் பற்றுகிறேன்.