வாழித்திருநாமங்கள்

மதுரகவியாழ்வார்

Azhvar: Vaazhi

Divyadesam: General

சித்திரையிற் சித்திரை நாள் சிறக்க வந்தோன் வாழியே திருக்கோளூர் அவதரித்த செல்வனார் வாழியே உத்தர கங்காதீரத்து உயர் தவத்தோன் வாழியே ஒளி கதிரோன் தெற்கு உதிக்க உகந்து வந்தோன் வாழியே பத்தியொடு பதினொன்றும் பாடினான் வாழியே பராங்குசனே பரன் என்று பற்றினான் வாழியே மத்திமமாம் பதப்பொருளை வாழ்வித்தான் வாழியே மதுரகவி திருவடிகள் வாழி வாழி வாழியே