வாழித்திருநாமங்கள்

திருமங்கையாழ்வார்

Azhvar: Vaazhi

Divyadesam: General

கலந்த திருக்கார்த்திகைக் கார்த்திகை வந்தோன் வாழியே காசினியொண் குறையலூர்க் காவலோன் வாழியே நலந் திகழ் ஆயிரத்து எண்பத்து நாலு உரைத்தோன் வாழியே நாலைந்தும் ஆறைந்தும் நமக்கு உரைத்தான் வாழியே இலங்கெழு கூற்றிருக்கை இரு மடல் ஈந்தான் வாழியே இம்மூன்றில் இருநூற்று இருபத்து ஏழு ஈந்தான் வாழியே வலந்திகழுங் குமுதவல்லி மணவாளன் வாழியே வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியே