வாழித்திருநாமங்கள்

திருப்பாணாழ்வார்

Azhvar: Vaazhi

Divyadesam: General

உம்பர் தொழும் மெய்ஞ்ஞான உறையூரான் வாழியே உரோகிணி நாள் கார்த்திகையில் உதித்த வள்ளல் வாழியே வம்பவிழ்தார் முனி தோளில் வகுத்த பிரான் வாழியே மலர்க்கண்ணில் வேறொன்றும் வையாதான் வாழியே அம்புவியில் மதிள் அரங்கர் அகம் புகுந்தான் வாழியே அமலனாதிபிரான் பத்தும் அருளினான் வாழியே செம்பொன் அடி முடி அளவும் சேவிப்போன் வாழியே திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே