வாழித்திருநாமங்கள்

தொண்டரடிப்பொடியாழ்வார்

Azhvar: Vaazhi

Divyadesam: General

மண்டங்குடி அதனை வாழ்வித்தான் வாழியே மார்கழியிற் கேட்டைதனில் வந்துதித்தான் வாழியே தெண்டிரை சூழ் அரங்கரையே தெய்வம் என்றான் வாழியே திருமாலை ஒன்பத்தஞ்சுஞ் செப்பினான் வாழியே பண்டு திருப்பள்ளியெழுச்சிப் பத்து உரைத்தான் வாழியே பாவையர்கள் கலவிதனைப் பழித்த செல்வன் வாழியே தொண்டு செய்து துளபத்தால் துலங்கினான் வாழியே தொண்டரடிப் பொடியாழ்வார் துணைப்பதங்கள் வாழியே