வாழித்திருநாமங்கள்

பெரியாழ்வார்

Azhvar: Vaazhi

Divyadesam: General

நல்ல திருப்பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே நானூற்று இருபத்து ஒன்றும் நமக்கு உரைத்தான் வாழியே சொல்லரிய வாணிதனிற் சோதி வந்தான் வாழியே தொடை சூடிக்கொடுத்தாள்தான் தொழுந்தமப்பன் வாழியே செல்வநம்பி தன்னைப்போற் சிறப்புற்றான் வாழியே சென்று கிழி அறுத்து மால் தெய்வம் என்றான் வாழியே வில்லிபுத்தூர் நகரத்தை விளக்கினான் வாழியே வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே