வாழித்திருநாமங்கள்
குலசேகரப்பெருமாள்
Azhvar: Vaazhi
Divyadesam: General
அஞ்சன மா மலைப் பிறவி ஆதரித்தோன் வாழியே அணி அரங்கர் மணத்தூணை அடைந்து உய்ந்தோன் வாழியே வஞ்சிநகரந் தன்னில் வாழ வந்தோன் வாழியே மாசிதனிற் புனர்பூசம் வந்துதித்தான் வாழியே அஞ்சல் எனக் குடப்பாம்பில் அங்கையிட்டான் வாழியே அநவரதம் இராமகதை அருளுமவன் வாழியே செஞ்சொல்மொழி நூற்று அஞ்சுஞ் செப்பினான் வாழியே சேரலர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே