வாழித்திருநாமங்கள்

நம்மாழ்வார்

Azhvar: Vaazhi

Divyadesam: General

ஆன திருவிருத்த நூறும் அருளினான் வாழியே ஆசிரியம் ஏழு பாட்டு அளித்த பிரான் வாழியே ஈன மறவந்தாதி எண்பத்து ஏழு ஈந்தான் வாழியே இலகு திருவாய்மொழி ஆயிரம் உரைத்தான் வாழியே வான் அணியு மாமாடக் குருகை மன்னன் வாழியே வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே சேனையர்கோன் அவதாரஞ் செய்த வள்ளல் வாழியே திருக்குருகைச் சடகோபன் திருவடிகள் வாழியே