வாழித்திருநாமங்கள்

திருமழிசைபிரான்

Azhvar: Vaazhi

Divyadesam: General

அன்புடன் அந்தாதி தொண்ணூற்று ஆறு உரைத்தான் வாழியே அழகாருந் திருமழிசை அமர்ந்த செல்வன் வாழியே இன்பமிகு தையில் மகத்து இங்கு உதித்தான் வாழியே எழிற் சந்த விருத்தம் நூற்று இருபது ஈந்தான் வாழியே முன்புகத்தில் வந்துதித்த முனிவனார் வாழியே முழுப்பெருக்கில் பொன்னி எதிர் மிதந்த சொல்லோன் வாழியே நன்புவியில் நாலாயிரத்து எழுநூற்றான் வாழியே நங்கள் பத்திசாரன் இரு நற்பதங்கள் வாழியே