வாழித்திருநாமங்கள்
பேயாழ்வார்
Azhvar: Vaazhi
Divyadesam: General
திருக்கண்டேன் என நூறுஞ் செப்பினான் வாழியே சிறந்த ஐப்பசி சதயம் செனித்த வள்ளல் வாழியே மருக் கமழும் மயிலைநகர் வாழ வந்தோன் வாழியே மலர்கரிய நெய்தல்தனில் வந்துதித்தான் வாழியே நெருங்கிடவே இடைகழியில் நின்ற செல்வன் வாழியே நேமி சங்கன் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே பெருக்கமுடன் திருமழிசைப்பிரான் தொழுவோன் வாழியே பேயாழ்வார் தாளிணை இப்பெருநிலத்தில் வாழியே