வாழித்திருநாமங்கள்

பூதத்தாழ்வார்

Azhvar: Vaazhi

Divyadesam: General

அன்பே தகளி நூறும் அருளினான் வாழியே ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே நன்புகழ்சேர் குருக்கத்தி நாண்மலரோன் வாழியே நல்ல திருக்கடன்மல்லை நாதனார் வாழியே இன்புருகு சிந்தை திரியிட்ட பிரான் வாழியே எழின் ஞானச் சுடர் விளக்கை ஏற்றினான் வாழியே பொன்புரையுந் திருவரங்கர் புகழ் உரைப்போன் வாழியே பூதத்தார் தாளிணை இப்பூதலத்தில் வாழியே