வாழித்திருநாமங்கள்
பொய்கையாழ்வார்
Azhvar: Vaazhi
Divyadesam: General
செய்ய துலா வோணத்தில் செகத்துதித்தான் வாழியே திருக்கச்சி மாநகரஞ் செழிக்க வந்தோன் வாழியே வையந் தகளி நூறும் வகுத்துரைத்தான் வாழியே வனச மலர்க் கரு அதனில் வந்தமைந்தான் வாழியே வெய்ய கதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே வேங்கடவர் திருமலையை விரும்புமவன் வாழியே பொய்கைமுனி வடிவழகும் பொற்பதமும் வாழியே பொன்முடியுந் திருமுகமும் பூதலத்தில் வாழியே