திருப்பாவை
வாழித்திருநாமங்கள்
Azhvar: Andal
Divyadesam: General
திருவாடிப் பூரத்திற் செகத்துதித்தாள் வாழியே திருப்பாவை முப்பதுஞ் செப்பினாள் வாழியே பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே உயர் அரங்கர்க்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே மருவாருந் திருமல்லி வளநாடி வாழியே வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே