திருப்பாவை

திருப்பாவை

Azhvar: Andal

Divyadesam: General

Running Number: 502

Important: Yes

சிற்றஞ் சிறுகாலே * வந்து உன்னைச் சேவித்து * உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் * பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து * நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது ** இற்றைப் பறை கொள்வான் * அன்று காண் கோவிந்தா! * எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் * உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் * மற்றை நம் காமங்கள் மாற்று - ஏல் ஓர் எம் பாவாய்