திருப்பாவை
திருப்பாவை
Azhvar: Andal
Divyadesam: General
Running Number: 501
கறவைகள் பின் சென்று * கானம் சேர்ந்து உண்போம் * அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து * உன் தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம் * குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா! ** உன் தன்னோடு உறவேல் நமக்கு * இங்கு ஒழிக்க ஒழியாது * அறியாத பிள்ளைகளோம் அன்பினால் * உன் தன்னைச் சிறு பேர் அழைத்தனவும் சீறியருளாதே * இறைவா! நீ தாராய் பறை - ஏல் ஓர் எம் பாவாய்