திருப்பாவை
திருப்பாவை
Azhvar: Andal
Divyadesam: General
Running Number: 500
Important: Yes
கூடாரை வெல்லும் சீர்க் * கோவிந்தா * உன் தன்னைப் பாடிப் பறை கொண்டு யாம் பெறு சம்மானம் * நாடு புகழும் பரிசினால் நன்றாகச் * சூடகமே தோள்வளையே தோடே செவிப் பூவே ** பாடகமே என்று அனைய * பல்கலனும் யாம் அணிவோம் * ஆடை உடுப்போம் அதன் பின்னே பால் சோறு * மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக் * கூடி இருந்து குளிர்ந்து - ஏல் ஓர் எம் பாவாய்