திருப்பாவை

திருப்பாவை

Azhvar: Andal

Divyadesam: General

Running Number: 499

மாலே! மணிவண்ணா! * மார்கழி நீர் ஆடுவான் * மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் * ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன * பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே ** போல்வன சங்கங்கள் * போய்ப்பாடு உடையனவே * சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே * கோல விளக்கே கொடியே விதானமே * ஆலின் இலையாய்! அருள் - ஏல் ஓர் எம் பாவாய்