திருப்பாவை
திருப்பாவை
Azhvar: Andal
Divyadesam: General
Running Number: 498
ஒருத்தி மகனாய்ப் பிறந்து * ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் * தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த * கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் ** நெருப்பு என்ன நின்ற நெடுமாலே! * உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் * திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி * வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்து - ஏல் ஓர் எம் பாவாய்