திருப்பாவை

திருப்பாவை

Azhvar: Andal

Divyadesam: General

Running Number: 497

Important: Yes

அன்று இவ் உலகம் அளந்தாய்! * அடி போற்றி! * சென்று அங்குத் தென் இலங்கை செற்றாய்! திறல் போற்றி! * பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி! * கன்று குணிலா எறிந்தாய்! கழல் போற்றி! ** குன்று குடையா எடுத்தாய்! * குணம் போற்றி! * வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி! * என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் * இன்று யாம் வந்தோம் இரங்கு - ஏல் ஓர் எம் பாவாய்