திருப்பாவை

திருப்பாவை

Azhvar: Andal

Divyadesam: General

Running Number: 496

Important: Yes

மாரி மலை முழஞ்சில் * மன்னிக் கிடந்து உறங்கும் * சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து * வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி * மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் ** போதருமா போலே * நீ பூவைப்பூ வண்ணா! * உன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளி * கோப்பு உடைய சீரிய சிங்காசனத்து இருந்து * யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள் ஏல் ஓர் எம் பாவாய்