திருப்பாவை

திருப்பாவை

Azhvar: Andal

Divyadesam: General

Running Number: 495

அங்கண் மா ஞாலத்து அரசர் * அபிமான பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டின் கீழே * சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம் * கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே ** செங்கண் சிறுச் சிறிதே * எம் மேல் விழியாவோ? * திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல் * அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் * எங்கள் மேல் சாபம் இழிந்து - ஏல் ஓர் எம் பாவாய்