திருப்பாவை
திருப்பாவை
Azhvar: Andal
Divyadesam: General
Running Number: 494
ஏற்ற கலங்கள் * எதிர் பொங்கி மீது அளிப்ப * மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் * ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய் * ஊற்றம் உடையாய்! பெரியாய்! ** உலகினில் தோற்றமாய் நின்ற * சுடரே! துயில் எழாய் * மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண் * ஆற்றாது வந்து உன் அடிபணியுமா போலே * போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து - ஏல் ஓர் எம் பாவாய்