திருப்பாவை
திருப்பாவை
Azhvar: Andal
Divyadesam: General
Running Number: 493
முப்பத்து மூவர் * அமரர்க்கு முன் சென்று * கப்பம் தவிர்க்கும் கலியே! துயில் எழாய் * செப்பம் உடையாய்! திறல் உடையாய்! * செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயில் எழாய் ** செப்பு அன்ன மென்முலைச் * செவ்வாய்ச் சிறு மருங்குல் * நப்பின்னை நங்காய்! திருவே! துயில் எழாய் * உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை * இப்போதே எம்மை நீர் ஆட்டு - ஏல் ஓர் எம் பாவாய்