திருப்பாவை

திருப்பாவை

Azhvar: Andal

Divyadesam: General

Running Number: 492

குத்து விளக்கு எரியக் * கோட்டுக் கால் கட்டில் மேல் * மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி * கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் * வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய் ** மைத்தடங் கண்ணினாய்! * நீ உன் மணாளனை * எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண் * எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால் * தத்துவம் அன்று தகவு - ஏல் ஓர் எம் பாவாய்