திருப்பாவை

திருப்பாவை

Azhvar: Andal

Divyadesam: General

Running Number: 491

Important: Yes

உந்து மத களிற்றன் * ஓடாத தோள் வலியன் * நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்! * கந்தம் கமழும் குழலீ! கடை திறவாய் * வந்து எங்கும் கோழி அழைத்தன காண் ** மாதவிப் பந்தல் மேல் * பல்கால் குயில் இனங்கள் கூவின காண் * பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாடச் * செந்தாமரைக் கையால் சீர் ஆர் வளை ஒலிப்ப * வந்து திறவாய் மகிழ்ந்து - ஏல் ஓர் எம் பாவாய்