திருப்பாவை
திருப்பாவை
Azhvar: Andal
Divyadesam: General
Running Number: 490
அம்பரமே தண்ணீரே * சோறே அறஞ் செய்யும் * எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய் * கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குல விளக்கே! * எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய் ** அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த * உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய் * செம்பொன் கழலடிச் செல்வா! பலதேவா! * உம்பியும் நீயும் உறங்கேல் - ஓர் எம் பாவாய்