திருப்பாவை
திருப்பாவை
Azhvar: Andal
Divyadesam: General
Running Number: 489
Important: Yes
நாயகனாய் நின்ற * நந்தகோபனுடைய கோயில் காப்பானே! * கொடித் தோன்றும் தோரண வாயில் காப்பானே! * மணிக்கதவம் தாள் திறவாய் * ஆயர் சிறுமியரோமுக்கு ** அறை பறை மாயன் மணிவண்ணன் * நென்னலே வாய் நேர்ந்தான் * தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான் * வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா! * நீ நேய நிலைக் கதவம் நீக்கு - ஏல் ஓர் எம் பாவாய்