திருப்பாவை
திருப்பாவை
Azhvar: Andal
Divyadesam: General
Running Number: 488
எல்லே! இளங்கிளியே! * இன்னம் உறங்குதியோ! * சில் என்று அழையேன்மின்! நங்கைமீர்! போதர்கின்றேன் * வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும் * வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக! ** ஒல்லை நீ போதாய் * உனக்கென்ன வேறு உடையை? * எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள் * வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க வல்லானை * மாயனைப் பாடு - ஏல் ஓர் எம் பாவாய்