திருப்பாவை

திருப்பாவை

Azhvar: Andal

Divyadesam: General

Running Number: 487

உங்கள் புழைக்கடைத் * தோட்டத்து வாவியுள் * செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் * செங்கல் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர் * தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் * எங்களை முன்னம் * எழுப்புவான் வாய் பேசும் * நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்! * சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் * பங்கயக் கண்ணானைப் பாடு - ஏல் ஓர் எம் பாவாய்