திருப்பாவை
திருப்பாவை
Azhvar: Andal
Divyadesam: General
Running Number: 486
புள்ளின் வாய் கீண்டானைப் * பொல்லா அரக்கனை * கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய் * பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார் * வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று ** புள்ளும் சிலம்பின காண் * போது அரிக் கண்ணினாய்! * குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே * பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால் * கள்ளம் தவிர்ந்து கலந்து - ஏல் ஓர் எம் பாவாய்