திருப்பாவை

திருப்பாவை

Azhvar: Andal

Divyadesam: General

Running Number: 485

கனைத்து இளங் கற்று எருமை * கன்றுக்கு இரங்கி * நினைத்து முலை வழியே நின்று பால் சோர * நனைத்து இல்லம் சேறு ஆக்கும் நற் செல்வன் தங்காய்! * பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றி ** சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற * மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய் * இனித் தான் எழுந்திராய் ஈது என்ன பேர் உறக்கம்! * அனைத்து இல்லத்தாரும் அறிந்து - ஏல் ஓர் எம் பாவாய்