திருப்பாவை

திருப்பாவை

Azhvar: Andal

Divyadesam: General

Running Number: 484

கற்றுக் கறவைக் * கணங்கள் பல கறந்து * செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும் * குற்றம் ஒன்று இல்லாத கோவலர்தம் பொற்கொடியே! * புற்றரவு அல்குல் புனமயிலே! போதராய் ** சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து * நின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாடச் * சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி! * நீ எற்றுக்கு உறங்கும் பொருள்? - ஏல் ஓர் எம் பாவாய்