திருப்பாவை
திருப்பாவை
Azhvar: Andal
Divyadesam: General
Running Number: 483
நோற்றுச் சுவர்க்கம் * புகுகின்ற அம்மனாய்! * மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்? * நாற்றத் துழாய் முடி நாராயணன் * நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால் ** பண்டு ஒரு நாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும் * தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ? * ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே! * தேற்றமாய் வந்து திற - ஏல் ஓர் எம் பாவாய்