திருப்பாவை
திருப்பாவை
Azhvar: Andal
Divyadesam: General
Running Number: 482
தூமணி மாடத்துச் * சுற்றும் விளக்கு எரிய * தூபம் கமழத் துயில் அணை மேல் கண்வளரும் * மாமான் மகளே! மணிக் கதவம் தாள் திறவாய் * மாமீர்! அவளை எழுப்பீரோ? * உன் மகள் தான் ஊமையோ? * அன்றிச் செவிடோ? அனந்தலோ? * ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ? * மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று * நாமம் பலவும் நவின்று - ஏல் ஓர் எம் பாவாய்