திருப்பாவை
திருப்பாவை
Azhvar: Andal
Divyadesam: General
Running Number: 481
கீழ் வானம் வெள்ளென்று * எருமை சிறு வீடு * மேய்வான் பரந்தன காண் மிக்கு உள்ள பிள்ளைகளும் * போவான் போகின்றாரைப் போகாமல் காத்து * உன்னைக் கூவுவான் வந்து நின்றோம் ** கோதுகலம் உடைய பாவாய்! எழுந்திராய் * பாடிப் பறை கொண்டு * மா வாய் பிளந்தானை மல்லரை மாட்டிய * தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் * ஆவா என்று ஆராய்ந்து அருள் - ஏல் ஓர் எம் பாவாய்