திருப்பாவை
திருப்பாவை
Azhvar: Andal
Divyadesam: General
Running Number: 480
கீசு கீசு என்று எங்கும் * ஆனைச்சாத்தன் * கலந்து பேசின பேச்சு அரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே! * காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து * வாச நறுங் குழல் ஆய்ச்சியர் ** மத்தினால் ஓசை படுத்தத் * தயிர் அரவம் கேட்டிலையோ? * நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி * கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ? * தேசம் உடையாய்! திற - ஏல் ஓர் எம் பாவாய்