திருப்பாவை
திருப்பாவை
Azhvar: Andal
Divyadesam: General
Running Number: 479
புள்ளும் சிலம்பின காண் * புள் அரையன் கோயில் * வெள்ளை விளி சங்கின் பேர் அரவம் கேட்டிலையோ? * பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சு உண்டு * கள்ளச் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி * வெள்ளத்து அரவில் * துயில் அமர்ந்த வித்தினை * உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் * மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம் * உள்ளம் புகுந்து குளிர்ந்து - ஏல் ஓர் எம் பாவாய்