திருப்பாவை

திருப்பாவை

Azhvar: Andal

Divyadesam: General

Running Number: 478

மாயனை * மன்னு வடமதுரை மைந்தனைத் * தூய பெருநீர் யமுனைத் துறைவனை * ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை * தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை ** தூயோமாய் வந்து நாம் * தூமலர் தூவித் தொழுது * வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் * போய பிழையும் புகுதருவான் நின்றனவும் * தீயினில் தூசு ஆகும் செப்பு - ஏல் ஓர் எம் பாவாய்