திருப்பாவை
திருப்பாவை
Azhvar: Andal
Divyadesam: General
Running Number: 477
ஆழி மழைக் கண்ணா! * ஒன்று நீ கை கரவேல் * ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி * ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப் * பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில் ** ஆழி போல் மின்னி * வலம்புரி போல் நின்று அதிர்ந்து * தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழைபோல் * வாழ உலகினில் பெய்திடாய் * நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்து - ஏல் ஓர் எம் பாவாய்