திருப்பாவை
திருப்பாவை
Azhvar: Andal
Divyadesam: General
Running Number: 476
Important: Yes
ஓங்கி உலகு அளந்த * உத்தமன் பேர் பாடி * நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால் * தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து * ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடு கயல் உகளப் ** பூங்குவளைப் போதில் * பொறிவண்டு கண்படுப்பத் * தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி வாங்க * குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் * நீங்காத செல்வம் நிறைந்து - ஏல் ஓர் எம் பாவாய்