திருப்பாவை

திருப்பாவை

Azhvar: Andal

Divyadesam: General

Running Number: 475

வையத்து வாழ்வீர்காள்! * நாமும் நம் பாவைக்குச் * செய்யும் கிரிசைகள் கேளீரோ * பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடி பாடி * நெய் உண்ணோம் பால் உண்ணோம் நாட்காலே நீராடி ** மை இட்டு எழுதோம் * மலர் இட்டு நாம் முடியோம் * செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம் * ஐயமும் பிச்சையும் ஆம்தனையும் கைகாட்டி * உய்யும் ஆறு எண்ணி உகந்து - ஏல் ஓர் எம் பாவாய்