திருப்பாவை

திருப்பாவை

Azhvar: Andal

Divyadesam: General

Running Number: 474

Important: Yes

மார்கழித் திங்கள் * மதி நிறைந்த நல் நாளால் * நீராடப் போதுவீர்! போதுமினோ நேர் இழையீர்! * சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! * கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ** ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் * கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் * நாராயணனே நமக்கே பறை தருவான் * பாரோர் புகழப் படிந்து - ஏல் ஓர் எம் பாவாய்