திருப்பல்லாண்டு

திருப்பல்லாண்டு

Azhvar: Periyazhvar

Divyadesam: General

Running Number: 10

எந்நாள் எம்பெருமான் * உன் தனக்கு அடியோம் என்று எழுத்துப்பட்ட அந்நாளே * அடியோங்கள் அடிக் குடில் வீடு பெற்று உய்ந்தது காண் ** செந்நாள் தோற்றித் * திரு மதுரையுள் சிலை குனித்து * ஐந்தலைய பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே! * உன்னைப் பல்லாண்டு கூறுதுமே