திருப்பல்லாண்டு

திருப்பல்லாண்டு

Azhvar: Periyazhvar

Divyadesam: General

Running Number: 9

உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை உடுத்து * கலத்தது உண்டு * தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன * சூடும் இத்தொண்டர்களோம் ** விடுத்த திசைக் கருமம் திருத்தித் * திருவோணத் திருவிழவில் * படுத்த பைந் நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் * பல்லாண்டு கூறுதுமே