திருப்பல்லாண்டு
திருப்பல்லாண்டு
Azhvar: Periyazhvar
Divyadesam: General
Running Number: 8
நெய்யிடை நல்லதோர் சோறும் * நியதமும் அத்தாணிச் சேவகமும் * கை அடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு * காதுக்குக் குண்டலமும் ** மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து * என்னை வெள்ளுயிர் ஆக்கவல்ல * பையுடை நாகப் பகைக் கொடியானுக்குப் * பல்லாண்டு கூறுவனே